இந்தியா

வாட்ஸ் ஆப் போன்ற தகவல் செயலியை உருவாக்கியுள்ள இந்திய ராணுவம்

29th Oct 2020 03:51 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: வாட்ஸ் ஆப் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஒரு தகவல் செயலியை இந்திய ராணுவம் உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இதுதொடர்பாக வியாழனன்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வாட்ஸ் ஆப் போன்றே செயல்படக்கூடிய, ‘செக்யூர் அப்ளிகேஷன் பார் தி இன்டர்நெட்’ (சாய்) என்னும் பெயர் கொண்ட ஒரு பாதுகாப்பான தகவல் செயலியை இந்திய ராணுவம் உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இணையத்தில் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் வழியாக குரல், எழுத்து மற்றும் விடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள முடியும்.

ADVERTISEMENT

தற்போது எளிதாக கிடைக்கக்கூடிய வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகளைப் போன்றே, துவக்கம் முதல் இறுதி வரை பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் என்பதை இந்த செயலியும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் நமக்கு ஏற்ற வகையில் பயன்படக்கூடிய முழுக்க இந்தியாவிலேயே செயல்படக்கூடிய சர்வர்கள், தனிப்பட்ட கோடிங் முறை உள்ளிட்டவற்றால் இது வேறுபட்டு சிறப்பானதாக விளங்குகிறது.

ராணுவ சைபர் பிரிவு மற்றும் ‘சேர்ட்-இன்’ குழுவில் உள்ள சிறப்புத் தணிக்கையாளரால் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கண்டுபிடிப்பிற்கு அறிவுசார் சொத்துரிமை கோரி விண்ணப்பித்தல், தகுந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் ஐஓஎஸ் உள்ளிட்ட இதர இயங்குதளங்களில் செயல்படும் வகையில் வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த செயலி மூலம் இனி நாடு தழுவிய வகையில் ராணுவ வீரர்களுக்கான தகவல் பரிமாற்றம் முழுமையாக நடைபெறும். இந்த செயலி உருவாக்கத்தில் முன்னிலை வகித்த கலோனியல் சாய் சங்கர் அவர்களது திறனை பாதுகாப்பு அமைச்சர் வெகுவாகப் பாராட்டினார்.

இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT