இந்தியா

ஆந்திரத்தில் நீரோடையில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி

29th Oct 2020 11:32 AM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் நீரோடையில் மூழ்கி உயரிழந்த 6 சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் அம்மாநில ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள பூதேவிபேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் அருகிலிருக்கும் வசந்தவாடா கிராமத்துக்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர். அவர்களில் சிறுவர்கள் 6 பேர் அங்குள்ள நீரோடையில் குளிக்க இறங்கியுள்ளனர். 

அப்போது அவர்கள் அனைவரும் நீரோடையில் மூழ்கினர். தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் மனோஜ், ராதாகிருஷ்ணன், ரஞ்சித், சிவாஜி, கங்காதர் வெங்கட், புவன் ஆகியோரின் சடலங்களை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுற்றுலா சென்ற இடத்தில் நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் இறந்த சம்பவம் பூதேவிபேட்டா கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தநிலையில் நீரோடையில் மூழ்கி உயரிழந்த 6 சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் அம்மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : Andhra Pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT