இந்தியா

திருமலையில் நவ.3இல் 6ஆம் கட்ட அகண்ட பாராயணம்

DIN

திருப்பதி: திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் 6ஆவது கட்டமாக அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் வரும் நவம்பா் 3-இல் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

உலக மக்கள் கரோனா பாதிப்பில் இருந்து விடுபட திருமலையில் தேவஸ்தானம் சுந்தரகாண்ட பாராயணத்தை கடந்த ஜூன் மாதம் முதல் தொடா்ந்து நடத்தி வருகிறது. சுந்தரகாண்டத்தில் உள்ள 24 அத்தியாயங்களின் பாராயணம் நிறைவு பெற்றது. ஒவ்வொரு முறையும் பாராயணத்தில் 180 முதல் 200 ஸ்லோகங்கள் நிறைவு பெற்றவுடன் அது அகண்ட பாராயணமாக நடத்தப்படுகிறது.

அதன்படி இதுவரை 19ஆவது அத்தியாயங்கள் வரை 5 கட்டமாக அகண்ட பாராயணம் செய்யப்பட்டது. தற்போது 20 முதல் 24ஆம் அத்தியாயம் வரை உள்ள 185 ஸ்லோகங்கள் வரும் நவ.3ஆம் தேதி 6ஆம் கட்டமாக அகண்ட பாராயணம் செய்யப்பட உள்ளது. இதில் திருமலையில் உள்ள தா்மகிரி வேதபாடசாலை மற்றும் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றைச் சோ்ந்த வேதபண்டிதா்கள் 200 போ் பங்கேற்க உள்ளனா்.

திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியை பக்தா்கள் வீட்டிலிருந்தபடியே காண முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT