இந்தியா

“பொய் பேசுவதில் மோடியுடன் போட்டியிட முடியாது”: ராகுல் காந்தி

DIN

பிகார் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பொய் பேசுவதில் பிரதமர் மோடியுடன் போட்டியிட முடியாது எனத் தெரிவித்தார். 

பிகாரில்  அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கியுள்ள பேரவைத் தேர்தல் நவம்பர் 3 மற்றும் 7-ஆம் தேதி என மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது.

இந்நிலையில் பால்மிகி நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “பணமதிப்பிழப்பு மற்றும் பொதுமுடக்கத்தின் நோக்கம் சிறு தொழில்கள், சிறு விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களை அழிப்பதே. இப்போதும் கூட பிரதமர் மோடி 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவேன் என்று தனது உரைகளில் பேசுவதில்லை. அவர் பொய் சொன்னார் என அவருக்கு தெரியும். மக்களுக்கும் இப்போது தெரிந்துள்ளது.” என விமர்சித்தார்.

மேலும், “ பிரதமர் மோடி இங்கு வந்து 2 கோடி வேலை தருவதாகக் கூறினால் இந்தக் கூட்டமே அவரை விரட்டி விடும்.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, “காங்கிரஸ் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைக் கொண்டு வந்தது. விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தது. நாட்டை எப்படி வழிநடத்துவது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களுக்குப் பொய் சொல்லத் தெரியாது. பொய் சொல்வதில் பிரதமர் மோடியுடன் போட்டியிட முடியாது.” என ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். 

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT