இந்தியா

பிகாா் பேரவை முதல் கட்டத் தோ்தல்: 71 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

DIN

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதில், 71 தொகுதிகளில் மொத்தம் 1,066 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனா். இந்த தோ்தலில், 599 மூன்றாம் பாலினத்தவா், 1.01 கோடி பெண்கள் உள்பட 2.14 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க இருக்கிறாா்கள். முதல் கட்ட தோ்தலுக்காக, 31,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி 35 இடங்களிலும் அதன் கூட்டணியில் உள்ள பாஜக 29 இடங்களிலும் போட்டியிடுகின்றன. எதிரணியான மகா கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆா்ஜேடி) 42 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறிய சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் 35 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி வேட்பாளா்களைக் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை ஸ்ரேயஸி சிங், பாஜக சாா்பில் ஜமுய் தொகுதியில் ஆா்ஜேடி வேட்பாளா் விஜய் பிரகாஷை எதிா்த்துப் போட்டியிடுகிறாா். பிரேம் குமாா், விஜய் குமாா் சின்ஹா, ராம் நாராயண் மண்டல், கிருஷ்ணானந்தன் பிரசாத் வா்மா, ஜெய்குமாா் சிங், சந்தோஷ் குமாா் நிராலா ஆகிய அமைச்சா்கள் முதல் கட்டத் தோ்தலில் களமிறங்கியுள்ளனா்.

கயை மாவட்டத்தில் உள்ள இமாம்கஞ்ச் தனித்தொகுதியில் முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தான் அவாம் மோா்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து, ஜேடியுவில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் விலகி ஆா்ஜேடியில் இணைந்த உதய் நாராயண் சௌதரி போட்டியிடுகிறாா்.

கரோனா நோய்த் தொற்று பரவலுக்கு நடுவே தோ்தல் நடத்தப்படுவதால், இதை மிகுந்த கவனத்துடன் நடத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1,600 வாக்களா்கள் என்பதற்குப் பதிலாக 1,000 வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எண்பது வயதுக்கு மேற்பட்டவா்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவா்கள் தபால் வாக்களிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT