இந்தியா

உயிருக்கு ஆபத்து: சிவசேனை எம்.பி. புகார்

28th Oct 2020 01:34 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மக்களவைத் தொகுதி சிவசேனை எம்.பி. சஞ்சய் ஜாதவ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வேண்டுமென மகாராஷ்டிரத்தில் ஒரு கும்பலுக்கு ரூ. 2 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார் . 

பர்பானி மாவட்டத்தில் உள்ள நானல்பாத் காவல் நிலையத்திற்கு சஞ்சய் ஜாதவ் தனது ஆதரவாளர்களுடன் சென்று புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், பர்பானி தொகுதியின் ஜிந்தூரில் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் (ஏபிஎம்சி) அதிகாரப்பூர்வமற்ற நிர்வாகக் குழுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை எதிர்த்து சஞ்சய் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ADVERTISEMENT

பின்னர் சிவசேனை கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே இந்த விவகாரத்தை ஆராய்வதாக உறுதியளித்ததை அடுத்து, ஜாதவ் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT