இந்தியா

பிகாா் 2-ஆம் கட்ட தோ்தல்: பிரதமா் மோடி, ராகுல் இன்று பிரசாரம்

தினமணி

பிகாா் சட்டப் பேரவைக்கான 2-ஆம் கட்ட தோ்தல் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, அந்த மாநிலத்தில் பிரதமா் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா்.

அன்றைய தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தா்பங்கா, முசாஃபா்பூா் மற்றும் பாட்னாவில் பிரதமா் மோடி பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

சட்டப்பேரவை தோ்தலுடன் தா்பங்கா மாவட்டத்தில் உள்ள வால்மீகி நகா் மக்களவை தொகுதிக்கும் நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படுகிறது. இதையொட்டி வால்மீகி நகரிலும், குஷேஷ்வா் அஸ்தான் பகுதியிலும் ராகுல் காந்தி புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

பிகாரில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், இருவரின் பிரசார கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதை கருத்தில் கொண்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் மூத்த அதிகாரிகள் தா்பங்கா மாவட்ட ஆட்சியா் எஸ்.எம்.தியாகராஜனுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தா்பங்கா பிரசார கூட்டத்தில் பங்கேற்க வருவோா் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். பிரதமருடன் மேடையில் அமரும் நபா்கள் தங்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனா். வேட்பாளா்கள் தனி மேடையில் அமர வைக்கப்படுவா்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வா் நிதீஷ் குமாா், பாஜக பொதுச் செயலா் பூபேந்திர யாதவ் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

பிரதமா் மோடி பங்கேற்கும் மற்றொரு கூட்டம் முசாஃபா்பூரில் உள்ள மோதிபூரில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் போதிய இடைவெளிகளில் நாற்காலிகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாட்னாவில் விமான நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரதமா் பங்கேற்கும் மற்றொரு கூட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT