இந்தியா

கோவாவில் 2022-இல் நடைபெறும் தேர்தலில் என்சிபி போட்டியிடும்

28th Oct 2020 02:57 AM

ADVERTISEMENT

கோவா சட்டப்பேரவைக்கு 2022-இல் நடைபெறவுள்ள தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியது: கோவாவில் உள்ள 40 பேரவைத் தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் போட்டியிடும். ஒருவேளை ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்டால் தொகுதிப் பங்கீடு குறித்து பின்னர் விவாதிக்கப்படும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நாங்கள் தீவிரமாகப் பணியாற்றுவோம். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரை கோவா தேர்தலையொட்டி பொறுப்பாளராக நியமிப்போம்.
நம்பிக்கையான, ஒரு மாற்றுத் தலைமையை தேசியவாத காங்கிரஸ் வழங்கும். மக்களின் நம்பிக்கையைப் பெற தீவிரமாகப் பணியாற்றுவோம். கோவாவில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றார் அவர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT