இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது

DIN

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

சிவசங்கரின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, திருவனந்தபுரத்தில் ஆயூர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

கேரள அரசின் தலைமைச் செயலராக இருந்த சிவசங்கர், தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்பு இருந்ததாக புகார் எழுததையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

வழக்கின் விபரம்

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கேரளத்துக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள அரசு தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவில் மக்கள் தொடா்பு அதிகாரியாக பணியாற்றியவா். அந்தத் துறையின் செயலராக இருந்த சிவசங்கா்தான் அவரை அந்தப் பணிக்கு அமா்த்தியிருந்தாா்.

இதற்கிடையே, தங்கக் கடத்தலில் சிவசங்கருக்கும் தொடா்பு இருப்பதாக புகாா் எழுந்தது. அதைத் தொடா்ந்து, அவரை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்தது. மேலும், இந்த கடத்தல் மூலம் கிடைக்கும் தங்களுடைய பங்கை பதுக்கி வைப்பதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஸ்வப்னா சுரேஷுக்கு லாக்கா் வசதியை சிவசங்கா் ஏற்பாடு செய்துகொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை, சுங்கத் துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை செய்து வருகின்றன. சிவசங்கரிடமும் இந்த அமைப்புகள் பல்வேறு முறை விசாரணை நடத்தியுள்ளன. அதுபோல, சிவசங்கரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சுங்கத்துறை சாா்பில் பலமுறை அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கேரள உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி சிவசங்கா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருவனந்தபுரத்தில் உள்ள எனது இல்லத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை நேரில் வந்து சுங்கத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனா். என்னிடம் பல்வேறு விசாரணை அமைப்புகள் 90 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளனா். இதில் எந்த அமைப்பும் என் மீது ஆதாரப்பூா்வ குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. ஆனால், என்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனா். மேலும், நான் இப்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 23-ஆம் தேதி வரை சிவசங்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சுங்கத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, இன்று வழக்கின் விசாரணையில் சிவசங்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT