இந்தியா

“கோவில்களை திறக்காவிட்டால் பூட்டுகளை உடைப்போம்”: மகாராஷ்டிர பாஜக தலைவர்

DIN

நவம்பர் 1ஆம் தேதி முதல் கோவில்களைத் திறக்காவிட்டால் அதன் பூட்டுகளை உடைத்து கோவிலுக்குள் நுழைவோம் என மகாராஷ்டிர பாஜக தலைவர் துஷார் போசல் தெரிவித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மகாராஷ்ரிடத்தில் தளர்வுகளுடன் பல்வேறு தொழில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அம்மாநில அரசு அனுமதியளிக்கவில்லை.

இதுதொடர்பாக மாநில ஆளுநருக்கும், முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கும் இடையே மோதல் வெடித்தபோதும் கரோனா தொற்று பரவலால் மத வழிபாட்டுத் தலங்கள் திறப்பது சாத்தியமில்லை என மாநில அரசுத் தெரிவித்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர பாஜக தலைவர் போசல், "நாங்கள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்தித்து மாநிலத்தில் கோவில்களைத் திறக்கக் கோரியுள்ளோம்.நவம்பர் 1 முதல் கோவில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசு முடிவு எடுக்காவிட்டால் கோவில்களின் பூட்டுகளை உடைப்போம்." எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் இதுவரை 16 லட்சத்து 54 ஆயிரத்து 28 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT