இந்தியா

திருப்பூர் அருகே உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம்

DIN

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள ரெட்டிபாளையம் பிரிவில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு கள 
ஒருங்கிணைப்பாளர் கௌரீஸ்வரன் தலைமை வகித்தார். 

இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோவாட் திட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்திய தந்தி சட்டத்தையும், திட்டத்தையும் எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கானது வரும் நவம்பர் 21 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், திட்டப்பணிகளைத் தொடங்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முன் நுழைவு அனுமதி வழங்கக்கூடாது. மத்திய, மாநில அரசுகளிடம் உரிய அனுமதி பெறாத தனியார் கார்ப்பரெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட முன் நுழைவு அனுமதியை ஆட்சியர் ரத்து செய்ய வேண்டும் என்றனர். 

இந்தப் போராட்டத்தில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாநிலப் பொருளாளர் கே.கே.சி.பாலு, தற்சார்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கி.வெ.பொன்னையன், திமுக ஊத்துக்குளி ஒன்றிய கழக செயலாளர் பி.பி. ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் தோழர்.ஆர்.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல, தாராபுரம் வட்டம் சங்கரண்டாம் பாளையத்திலும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT