இந்தியா

தெலங்கானாவில் 9 பேர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை

28th Oct 2020 04:30 PM

ADVERTISEMENT

தெலங்கானாவில் 3 வயது சிறுவன் உள்பட 9 பேரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து வாரங்கல் மாவட்ட நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் கீசுகொண்டா மண்டலத்தின் கோரெகுந்தா கிராமத்தில் மே 20 மற்றும் 21 தேதிகளில் 3 வயது சிறுவன் உள்பட 9 பேர் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பீகாரைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி சஞ்சய் குமார் யாதவ் கைது செய்யப்பட்டார். 

தெலங்கானா சம்பவம்: ஒரு கொலையை மறைக்க 9 பேரைக் கொன்றவர் கைது

இவர் முன்னதாக ரபிகா என்ற பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். ரபிகாவின் 16 வயது மகளை சஞ்சய் காதலித்து வந்ததாகவும், அதற்கு ரபிகா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ரபிகா கொலை தொடர்பாக தனியே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வரும் நிலையில், அந்த கொலையை மறைக்க மேலும் 9 பேரை சஞ்சய் கொலை செய்து கிணற்றில் வீசியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில், மாவட்ட நீதிபதி கே.ஜெய குமார், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

Tags : Telangana
ADVERTISEMENT
ADVERTISEMENT