இந்தியா

கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: கர்நாடக அமைச்சர் சுதாகர்

DIN

2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று கர்நாடக மாநில சுகாதாரம், மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்தார்.
கரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இந்தியாவில் அதை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்து வரும் ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ககன்சிங் பேடியை பெங்களூரில் செவ்வாய்க்கிழமை சந்தித்த பிறகு, சுதாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
கரோனா தடுப்பூசியை மேம்படுத்தியுள்ள ஆக்ஸ்போர்டு/ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் முதல்கட்ட சோதனைகள் நிறைவடைந்துள்ளன. இதன் முடிவு ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம், மூன்றாம் கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. 
2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசியை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதோடு, 100 கோடி டோஸ் தடுப்பூசியை வழங்க முடியும் என்று ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பேடி கூறியுள்ளார். இந்தத் தடுப்பூசி சந்தைக்கு வந்ததும், அதை கர்நாடகத்தின் அனைத்து மக்களுக்கும் வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 
முதல்கட்டமாக, கரோனா முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்கும், அதன் தொடர்ச்சியாக வேறு பல நோய்களால் அவதிப்படும் முதியோர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், குழந்தைகளுக்கும் அளிக்கப்படும். 
முதல்கட்ட சோதனையின்போது, ஆன்டிஜெனை உருவாக்கும் தடுப்பூசியை 56 பேருக்கு செலுத்தியதில், நம்பிக்கை அளிக்கும் வகையிலான முடிவுகள் கிடைத்துள்ளன. தடுப்பூசியை உடலில் செலுத்தியதும் உருவாகும் ஆன்டிஜென்கள் அப்படியே நிலைத்துள்ளன. ஆன்டிஜென்கள் உடலில் அப்படியே இருக்கிறதா என்பதை 6 மாதங்கள் காத்திருந்து உறுதி செய்ய வேண்டும். 
தடுப்பூசியின் விலை குறித்த சர்ச்சையில் தலையிட விரும்பவில்லை. தடுப்பூசியின் விலை குறித்து முதல்வர் எடியூரப்பாவே முடிவெடுப்பார்.  எனினும், கரோனா மாதிரி சோதனைகள் மட்டுமல்லாது, சிகிச்சைகளையும் மாநில அரசு இலவசமாக அளித்து வருகிறது. கரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மாநில அரசு செயல்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT