இந்தியா

நாட்டில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா; 508 பேர் பலி

ANI


புது தில்லி: நாட்டில் புதன்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 508 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று 40 ஆயிரத்துக்கும் கீழ் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பதிவான நிலையில் இன்று மீண்டும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 43,893 பேராக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 79.90 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 508 பேர் பலியாகினர். இதன் மூலம் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,20,010 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6,10,803 ஆக உள்ளது. இது நேற்றைய அளவை விட 15 ஆயிரம் குறைவாகும். கரோனா பாதித்தவர்களில் 58,439 பேர் குணமடைந்ததை அடுத்து, நாட்டில் இதுவரை கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 72.59 லட்சமாக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT