இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை

28th Oct 2020 03:19 PM

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வடக்கு எல்லைப்பகுதியான ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் புத்காம் மாவட்டத்தின் அரிபாக் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் இருப்பிடத்தை அறிந்த பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது திடீரென பாதுகாப்புப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

 

ADVERTISEMENT

கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : jammu kashmir
ADVERTISEMENT
ADVERTISEMENT