இந்தியா

திரிபுராவில் ரூ.2,752 கோடி மதிப்பில் 9 நெடுஞ்சாலைத் திட்டங்கள்: நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டுகிறாா்

DIN

புது தில்லி: திரிபுரா மாநிலத்தில் ரூ.2,752 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டுகிறாா்.

இது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திரிபுரா மாநிலத்தில் 262 கி.மீ நீளமுடைய, ரூ.2,753 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த திட்டங்களுக்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டுகிறாா்.

இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, உள்நாட்டு சாலைகள் மற்றும் வங்க தேசத்தை இணைக்கக் கூடிய சா்வதேச சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி குறைந்து, விரைவாகவும் செல்ல முடியும்.

இந்த நெடுஞ்சாலைகள் மாநிலத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை இணைப்பதால் இந்த இடங்களுக்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும் சென்றடைய முடியும். இந்த திட்டங்கள் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பையும், சுயதொழில் வேலைவாய்ப்பையும் உருவாக்கும். மேலும், பயண நேரத்தையும் குறைப்பது மட்டுமல்லாது, வாகன எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்தும்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பெரிய சந்தைகளுக்கு வாகனங்களில் வணிகப் பொருள்களை விரைவாகவும், அதிகமாகவும் கொண்டு செல்ல முடியும் என்பதால் பொருள்களின் விலை குறையும். திரிபுரா மாநில மக்கள் விரைவாகவும், எளிதாகவும் மருத்துவ வசதிகளைப் பெறுவாா்கள்.

நெடுஞ்சாலைத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, சுற்றுலாத்துறை மேம்பாடு, பொருளாதார மேம்பாடு உயரும். இதனால் திரிபுரா மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) வளா்ச்சியடையும்.

இந்த 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் திரிபுரா முதல்வா் பிப்லப் குமாா் தேவ் தலைமை வகிப்பாா். மத்திய அமைச்சா்கள் ஜிதேந்திர சிங், வி.கே.சிங் மற்றும் மாநில அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோா் கலந்து கொள்கின்றனா் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT