இந்தியா

தில்லியில் புதிதாக 4,853 பேருக்கு கரோனா

DIN


தில்லியில் புதிதாக 4,853 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 4,853 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,64,341 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 6,356 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,30,112 பேர் குணமடைந்துள்ளனர். 27,873 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தில்லியில் இன்று 57,210 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 44,56,029 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

SCROLL FOR NEXT