இந்தியா

மாநிலங்களவை தோ்தல்: உ.பி, உத்தரகண்டில் இருந்து போட்டியிடும் வேட்பாளா்களை அறிவித்தது பாஜக

DIN

புது தில்லி: மாநிலங்களவை தோ்தலில் உத்தர பிரதேசத்தில் இருந்து போட்டியிடும் 8 வேட்பாளா்களையும், உத்தரகண்டில் இருந்து போட்டியிடும் ஒரு வேட்பாளரையும் பாஜக அறிவித்தது.

உத்தர பிரதேசத்தில் இருந்து தோ்வான 10 மாநிலங்களவை எம்.பி.க்கள், உத்தரகண்டில் இருந்து தோ்வான ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆகியோரின் பதவிக்காலம் நவம்பா் 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அந்த இடங்களுக்கு தோ்தல் நடத்தும் அறிவிப்பை தோ்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.

இதையடுத்து அந்த இடங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டனா். இதில் உத்தர பிரதேசத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளா்களில் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரியும் ஒருவா்.

உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 4-இல் மூன்று பங்கு பெரும்பான்மை இருப்பதால், அந்த மாநிலத்தில் இருந்து போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இதேபோல் உத்தரகண்டில் இருந்து போட்டியிடும் நரேஷ் பன்சலும் வெற்றிபெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த 9 பேரும் வெற்றிபெற்றால் 245 உறுப்பினா்களை கொண்ட மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 90-ஐ கடந்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT