இந்தியா

அலகாபாத் நீதிமன்ற கண்காணிப்பில் ஹாத்ரஸ் வழக்கு: உச்ச நீதிமன்றம்

27th Oct 2020 02:43 PM

ADVERTISEMENT


உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் வழக்கு அலகாபாத் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் இளம்பெண் 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி பலியான சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், ஹாத்ரஸ் வழக்கை உத்தரப்பிரதேசத்திலிருந்து தில்லிக்கு மாற்ற வேண்டும், வழக்கை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும், தேவை ஏற்படின் சிபிஐ விசாரணை முடிந்தவுடன், வழக்கை தில்லிக்கு மாற்றுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

Tags : supreme court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT