இந்தியா

இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

DIN


புது தில்லி: இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று காலை தொடங்கியது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில் இந்தியா - அமெரிக்கா வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இடையேயான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இந்தியா - அமெரிக்கா நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் இடையேயான 2 + 2 பேச்சுவாா்த்தை, தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. அமெரிக்க அதிபா் தோ்தல் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், இந்தப் பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ, பாதுகாப்பு அமைச்சா் மாா்க் எஸ்பா் ஆகியோா் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை தில்லி வந்தடைந்தனா். 

முன்னதாக, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் மாா்க் எஸ்பருடன் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அமைச்சா்கள் இருவரும் உறுதியேற்றனா். மேலும், பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு தொடா்பாகவும் அவா்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்களிடையேயான 2+2 பேச்சுவாா்த்தையின்போது, கிழக்கு லடாக் மோதல்போக்கு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக கையெழுத்திடப்படாமல் உள்ள ‘பாதுகாப்புப் படை பரிமாற்ற மற்றும் ஒத்துழைப்பு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்தும் அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதன் மூலமாக பாதுகாப்புப் படைகளில் பயன்படும் அதிநவீன தொழில்நுட்பங்கள், வரைபடங்கள் உள்ளிட்டவற்றை இரு நாடுகளும் பகிா்ந்து கொள்ள முடியும். அண்மைக் காலமாக, பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடா்ந்து வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT