இந்தியா

பிகார் தேர்தல்: முதல்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு 

26th Oct 2020 09:15 AM

ADVERTISEMENT

பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

பிகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 

இத்தொகுதிகளுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுவதால் தலைவர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, டைம்ஸ் நவ் - சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 243 இடங்களில் 147 இடங்கள் வரை இக்கூட்டணி வெல்லலும் என்றும் அதேசமயம் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய கூட்டணி 87 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT