இந்தியா

தெலங்கானாவில் கரோனா பலி எண்ணிக்கை 1,311 ஆக உயர்வு

PTI

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 582 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளன. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானா கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதிதாக 582 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.31 லட்சமாக அதிகரித்துள்ளது.

தொற்று பாதித்த 18,611 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,11,912 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

இதுவரை தெலங்கானாவில் 40.94 லட்சம் சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 25-ம் தேதி மட்டும் 14,729 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,311-ஆக அதிகரித்துள்ளது. 

தெலங்கானாவில் மீட்பு விகிதம் 91.40 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 0.56 ஆகவும் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT