இந்தியா

மணிப்பூரில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து போக்குவரத்து துண்டிப்பு

26th Oct 2020 12:08 PM

ADVERTISEMENT

 

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக, தொடர்ந்து நான்காவது நாளாகத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிஐபிஎல் திட்ட மேலாளர் ஜெய்சன் கூறுகையில், 

தேசிய நெடுஞ்சாலை இணைப்பை மீண்டும் தொடங்க நிர்வாகம் முயற்சித்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் மீண்டும் தொடங்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம், ஆனால் வானிலை சாதகமாக இல்லாவிட்டால் அதிக நேரம் ஆகக்கூடும் என்று அவர் கூறினார்.

ADVERTISEMENT

அக்டோபர் 26 முதல் அக்டோபர் 29 வரை மணிப்பூரில் லேசான மழை பெய்யும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் இன்று 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது. 


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT