இந்தியா

நாட்டிலேயே முதல்முறையாக வழக்கின் விசாரணையை நேரலை செய்த குஜராத் உயர்நீதிமன்றம்

26th Oct 2020 03:46 PM

ADVERTISEMENT

நாட்டிலேயே முதல்முறையாக குஜராத்தில் உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெறும் வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டு வருகிறது. 

கரோனா அச்சறுத்தல் காரணமாக பல்வேறு சேவைகள் முடங்கிய நிலையில் தற்போது நாடு முழுவதும் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரோனா அச்சுறுத்தலால் தற்போது பல்வேறு நிறுவனங்களின் முக்கியக் கூட்டங்கள், மாணவர்களுக்கு வகுப்புகள் என முழுவதும் ஆன்லைன் வழியாகவே நடைபெறுகின்றன. 

அதேபோன்று, தற்போது பல மாநிலங்களில் பாதிப்பு குறைந்தாலும் கரோனா அச்சம் காரணமாக நீதிமன்றங்களில் பெரும்பாலாக காணொலி மூலமாகவே விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து, இதன் அடுத்தகட்டமாக குஜராத்தில் முதல்முறையாக நீதிமன்ற வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக வழக்கு நேரலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு பல்வேறு வழக்குகளை ஜூம் செயலி மூலமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைகள் https://www.youtube.com/watch?v=WpqQWBERB_Y என்ற யூட்யூப் தளத்தில் நேரலை செய்யப்படுகிறது. 

Tags : குஜராத்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT