இந்தியா

இந்தியாவில் இதுவரை 10.34 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்

26th Oct 2020 11:43 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி:  இந்தியாவில் இதுவரை 10 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரத்து 778 கரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் மட்டும் 9,39,309 லட்சம் மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 10,34,62,778 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களை மீட்பதில் அதிவேக வளர்ச்சியைக் கண்டு வருகிறது. கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 71.37 லட்சமாக அதிகரித்துள்ளது. தொற்றுக்கு இன்று மேலும் 480 போ் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி ண்ணிக்கை 1,19,014-ஆக அதிகரித்தது. 

உலகில் தொற்று வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவோர், புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மற்றும் தினசரி உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : ICMR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT