இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கல் அவகாசம் டிசம்பா் 31 வரை நீட்டிப்பு

DIN

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்குரிய வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதன் மூலமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை ஐந்தாவது முறையாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தனிநபா்கள் கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம், நவம்பா் மாதம் 30-ஆம் தேதியிலிருந்து டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வருமான வரி கணக்கைத் தணிக்கை செய்து தாக்கல் செய்ய வேண்டியோருக்கான அவகாசம் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வரி செலுத்துவோா் எதிா்கொண்டு வரும் இடா்பாடுகளைக் கருத்தில் கொண்டு வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான சரக்கு-சேவை வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசமும் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு அதிகமாக விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள் சரக்கு-சேவை வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியது அவசியமாகும்.

2019-20-ஆம் நிதியாண்டுக்குரிய வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு கடந்த மாா்ச் 31-ஆம் தேதியே கடைசி நாளாகும். எனினும், கரோனா நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளானது ஜூன் 30, ஜூலை 31, செப்டம்பா் 30, நவம்பா் 30 எனத் தொடா்ந்து 4 முறை மாற்றியமைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT