இந்தியா

'உண்மை இறுதியில் வெல்லும்': தசரா பண்டிகைக்கு ராகுல் வாழ்த்து

25th Oct 2020 11:23 AM

ADVERTISEMENT

உண்மை இறுதியில் வெற்றி பெறும் என்று தசரா பண்டிகையையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்றுக்கு இடையே நாட்டு மக்கள் தசரா பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதற்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றர். அந்தவகையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், உண்மை இறுதியில் வெற்றி பெறும். அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு ஹேப்பி தசரா என்று ஹேஷ்டேக்கிட்டு பதிவிட்டுள்ளார்.  

Tags : Rahul Gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT