இந்தியா

நாட்டில் கரோனா பரிசோதனைகள் 10.25 கோடியாக அதிகரிப்பு

DIN

நாட்டில் இதுவரை 10.25 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,64,811-ஆக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 50,129 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மட்டும் 11,40,905 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 10,25,23,469 ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களை மீட்கும் பணிகளில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மே மாதத்தில் 50,000 இருந்த மீட்பு எண்ணிக்கை அக்டோபர் 13 ஆம் தேதி வரை 63,01,928 -ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை இதுவரை 70,78,123 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 62,077 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT