இந்தியா

'எல்.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமார் சிறைக்குச் செல்வார்'

25th Oct 2020 05:44 PM

ADVERTISEMENT

பிகாரில் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

மேலும் பிகாரில் ஊழலற்ற ஆட்சியை அமைக்க லோக் ஜனசக்தி முயற்சிக்கும் என்றும் உறுதியளித்தார்.

பிகாரில் வரும் 28 மற்றும் நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே முதற்கட்டத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்தவகையில் பிகாரில் டும்ரான் மாவட்டத்திலுள்ள பக்ஸார் பகுதியில் லோக் ஜனசக்திக் கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

அப்போது பிரசார மேடையில் இருந்தவாறு அவர் பேசியதாவது, ''பிகார் மக்களுக்கு நான் ஒரு வாக்குறுதியை அளிக்கிறேன். பிகாரின் ஊழலற்ற ஆட்சியை அமைக்க லோக் ஜனசக்தி பாடுபடும். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அதிகாரிகளாக இருந்தாலும் சரி, முதல்வராக இருந்தாலும் சரி, ஊழல் செய்தவர்கள் சிறைக்குச் செல்வார்கள்'' என்று கூறினார்.

மேலும், ''பிகாரில் மதுபானத்தடை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. பல்வேறு இடங்களில் முறைகேடாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. இதற்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளமும் பின்புலமாக செயல்பட்டு வருகிறது'' என்று சாடினார். 

''பிகாருக்கு முன்னுரிமை, பிகாரிகளுக்கே முதலுரிமை என்ற கொள்கையின்படி மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு லோக் ஜனசக்தி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

Tags : Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT