இந்தியா

மகாராஷ்டிர வெள்ள பாதிப்பு: 'ரூ.10,000 கோடி நிதி போதாது'

DIN

மகாராஷ்டிரத்தில் வெள்ள பாதிப்பு நிவாரணமாக உத்தவ் தாக்கரே அரசு அறிவித்த ரூ.10,000 கோடி நிதி விவசாயிகளுக்கு போதாது என்று பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான பங்கஜ் முண்டே தெரிவித்துள்ளார்.

பருத்தி, சோயா பீன்ஸ், நெல் போன்ற பயிர்கள் கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு கூடுதலாக நிவாரண நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கிய அணைகள் நிரம்பியதால் ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரப் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது.

இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உள்ளிட்ட மக்களுக்காக ரூ.10,000 கோடி நிவாரண உதவியை அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். 

இதனிடையே விவசாயிகளுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ள இந்த நிதி போதாது என்று பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான பங்கஜ் முண்டே தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, ''பருத்தி, சோயா பீன்ஸ், நெல் போன்ற பயிர்கள் கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கரும்பு அறுவடை பருவத்தில் தொழிலாளர்கள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு இடையிலான இடர்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் ஒரு வழியை கண்டறிய வேண்டும்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT