இந்தியா

'ராமர் கோயிலை விட சீதை கோயிலைப் பெரிதாகக் கட்டுவோம்'

25th Oct 2020 06:02 PM

ADVERTISEMENT

பிகார் தேர்தலில் வெற்றி பெற்றால் ராமர் கோயிலை விட சீதா கோயிலைப் பெரிதாகக் கட்டுவோம் என்று லோக் ஜனசக்திக் கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

பிகாரில் வரும் 28 மற்றும் நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே முதற்கட்டத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே பிகார் தேர்தலையொட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், ''பிகாருக்கு முன்னுரிமை, பிகாரிகளுக்கே முதலுரிமை என்ற கொள்கையை முன்னெடுத்துள்ளோம்'' என்று கூறினார்.

மேலும், ''அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்தை விட சீதாமரி பகுதியில் தேவி சீதாவிற்கான கோயிலைக் கட்ட வேண்டும். சீதா தேவி இல்லாமல் ராமர் சரிதம் இல்லை. இதனால் ராமர் கோயிலின் தோற்ற ஒற்றுமையைக் கொண்ட வகையில் சீதா கோயில் கட்டப்படும். 

ADVERTISEMENT

எங்கள் கட்சி பிகாரில் சந்தேகமின்றி ஆட்சியமைக்கும். அவ்வாறு ஆட்சியமைத்தால் சீதாமரி பகுதியில் சீதா தேவிக்கான கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படும். 

தற்போது முதல்வராக உள்ளவர் பாஜகவின் கீழ் அடுத்த முதல்வராக பதவியேற்க வாய்ப்பில்லை. நாங்கள் பெரும்பான்மையைப் பெற்று பாஜக உடன் ஆட்சியமைப்போம்'' என்று சிராஜ் பாஸ்வான் கூறினார்.

Tags : Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT