இந்தியா

குடியுரிமை திருத்த சட்டம் எந்தவொரு மத சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல: மோகன் பகவத்

DIN


நாக்பூர்: குடியுரிமை திருத்த சட்டம் எந்தவொரு மத சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல. இந்த சட்டம் இஸ்லாமிய சமூகத்தினர் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று சிலர் பொய்யாகப் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சகோதரர்களை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார். 

நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தசரா விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில்,  “ குடியுரிமை திருத்த சட்டம் எந்தவொரு மத சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல. எனினும், சில போராட்டங்கள் இதற்கு எதிராக நடைபெற்றன. இஸ்லாமிய மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு நமது இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். போராட்டங்களை மீண்டும் தூண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்தியாவின் எல்லைப்பகுதிக்குள் சீனா எவ்வாறு அத்துமீறி நுழைகிறது என்பதை ஒட்டு மொத்த உலகமும் பார்த்தது. சீனாவின் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு குறித்து ஒவ்வொரு நாடும் அறியும். தைவான், வியட்நாம், அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுடன் சீனா சண்டையிட்டு வருது அனைவரும் தெரியும்.

ஆனால், இந்தியாவின் பதிலடி சீனாவை அச்சம் அடையச்செய்துள்ளது. சீனாவின் தாக்குதல்களுக்கு எதிராக நமது பாதுகாப்புப் படை வீரர்களும் குடிமக்களும் உறுதியாக நின்று தங்கள் உறுதியையும் வீரத்தையும் வெளிப்படுத்தினர். இது சீனாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது. சீனா எவ்வாறு நடந்து கொள்ளும் என்று நமக்கு தெரியாது, எனவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார். 

இந்தியா அனைத்து நாடுகளுடன் நட்பாக பழகக்கூடியது. இது நம்முதைய தேசத்தின் இயல்பு. ஆனால், நம்முறைய பணிவை, குணத்தை பலவீனமாக மதிப்பிட்டு, கொடூரமான சக்தியால் நம்மை பலவீனப்படுத்த முறச்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நம்மை எதிர்ப்பவர்கள் இதை இப்போது தெரிந்துகொள்ள வேண்டும். 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அயோத்தில் வழக்கிவ் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ஒட்டுமொத்த தேசமும் ஏற்றுக்கொண்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம்  தேதி, ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில்  இந்தியர்கள் பொறுமையுடன், உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததை காணமுடிந்தது. 

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டம் தொடர்பாக நாட்டில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்தது, அதனால்  பதற்றமான சூழல் உருவானது. இதுகுறித்து விரிவாக விவாதிப்பதற்குள், நம்முடைய கவனம் அனைத்து கரோனா பக்கம் திரும்பிவிட்டது. 

எனவே, சிலரின் மனதில் வகுப்புவாதம் தொடர்பான சிந்தனை அவர்கள் மனதில்  மட்டுமே இருந்தது. கரோனா அனைத்து விவகாரங்களையும் கரோனா மறைத்துவிட்டது. 

கரோனா குறித்து அரசு  நிர்வாகம் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரித்ததால் கரோனா தொற்றால் ஏற்படும் சேதம் நாட்டில் குறைவாக உள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் கரோனா கட்டுக்குள் வந்தது. 

மக்கள் மனதில் கரோனா குறித்த பயம் இருந்ததால் மக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

கரோனாவால் சுத்தம், சுகாதாரம், வாழும் சூழலை சுத்தமாக வைத்திருத்தல், குடும்பத்தின் மதிப்பு ஆகியவற்றை உணர முடிந்தது என்று மோகன் பகவத் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT