இந்தியா

மிசோரத்தில் பள்ளிகள் திறப்பு எதிரொலி: 15 மாணவர்களுக்கு கரோனா

25th Oct 2020 01:23 PM

ADVERTISEMENT

மிசோரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதன் எதிரொலியாக 15 மாணவர்கள் உள்பட 58 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மிசோரம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மிசோரத்தில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் 15 பள்ளி குழந்தைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிசோரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 58 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,447-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இதில் 249 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை கரோனா உயிரிழப்புகள் எதுவும் நிகழாத நிலையில், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2,198-ஆக அதிகரித்துள்ளது. 

பள்ளிகள் திறந்ததன் எதிரொலியாக தற்போது மிசோரத்தில் பள்ளி மாணவர்களுக்கும் கரோனா பரவி வருகிறது. இதன் எதிரொலியாக பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT