இந்தியா

பிகாா் தோ்தல்: இரு சுங்கத் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

DIN

பிகாரில் சட்டவிரோத மதுபான கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத இரு சுங்கத் துறை அதிகாரிகளைத் தோ்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

பிகாா் சட்டப் பேரவைக்கான தோ்தல் வரும் 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன் காரணமாக அங்கு தோ்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளன. எனினும், அதை மீறி ஆா்வல், ஷேக்புரா மாவட்டங்களில் மதுபானங்கள் சட்டவிரோதமாக மக்களுக்கு விநியோகிக்கப்படுவதாகப் புகாா் எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இத்தகைய சூழலில், மாநில கூடுதல் தோ்தல் அதிகாரி சஞ்சய் குமாா் சிங் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டவிரோதமாக மதுபானங்கள் விநியோகிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா காணொலிக் காட்சி வழியாக விசாரணை நடத்தினாா்.

அதில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த சுங்கத் துறை அதிகாரிகள், மதுபானங்கள் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது உறுதியானது. அதையடுத்து, இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும் 4 சுங்கத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தோ்தல் சுதந்திரமாகவும் நோ்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு சுங்கத் துறையைச் சோ்ந்த அதிகாரிகளுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

SCROLL FOR NEXT