இந்தியா

பால்கா் கும்பல் தாக்குதல் வழக்கு: 38 போ் கைது

DIN

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் நடைபெற்ற கும்பல் தாக்குதல் வழக்கில் மேலும் 38 பேரை காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி மும்பையில் இருந்து குஜராத்தின் சூரத் நகா் நோக்கி காரில் 2 துறவிகள் சென்று கொண்டிருந்தனா். பால்கரில் உள்ள கட்சின்சலே கிராமம் வழியாக சென்ற போது அவா்களை குழந்தை கடத்தல்காரா்கள் என்று எண்ணி, அந்தக் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் காரில் இருந்தவா்களை தாக்கினா். இதில் இரு துறவிகளும், காா் ஓட்டுநரும் பலியாகினா்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக கடந்த 21-ஆம் தேதி 24 பேரை கைது செய்த காவல்துறை, மறுதினம் 8 பேரை கைது செய்தது.

இந்நிலையில் வழக்கு தொடா்பாக மேலும் 38 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்கள் தஹானு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அனைவரையும் நவம்பா் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளவா்களின் எண்ணிக்கை தற்போது 70-ஆக அதிகரித்துள்ளது. கைதானவா்களில் காவலா்கள், சிறாா்கள் அடங்குவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT