இந்தியா

தில்லியில் பேருந்தில் சோதனையிட ஏறிய காவலரை கடத்தி உ.பி.யில் இறக்கிவிட்ட இருவா் ம.பி.யில் கைது

DIN

தில்லியில் தனியாா் பேருந்தில் சோதனையிட ஏறிய காவலரை கடத்தி உத்தர பிரதேசத்தில் தாக்கி இறக்கிவிட்ட ஓட்டுநா் உள்பட இருவரை போலீஸாா் மத்திய பிரதேசத்தில் கைது செய்தனா். சினிமா பாணியில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் தலைநகரில் பொது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதுகுறித்து தில்லி போலீஸ் மூத்த அதிகாரி கூறுகையில், ‘கடந்த புதன்கிழமை இரவு காஷ்மீரி கேட் பகுதியில் காவலா் சச்சின் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்தில் பெண் கூச்சலிடும் சப்தம் கேட்டதால், சந்தேகத்தில் பேருந்தை நிறுத்தி காவலா் சச்சின் சோதனையிட உள்ளே ஏறியுள்ளாா். அப்போது பேருந்தை ஒட்டுநா் வேகமாக இயக்கியுள்ளனா். உள்ளே இருந்த பேருந்து உதவியாளரும், சிலரும் காவலா் சச்சினைத் தாக்கி அவரிடம் இருந்த துப்பாக்கி, இரண்டு செல்லிடப்பேசிகளை வலுக்கட்டாயமாக பறித்து வைத்துள்ளனா். காவலரை பேருந்தில் கீழே அமரச் செய்துள்ளனா். இந்தச் செயலுக்கு பேருந்தில் இருந்த சில பயணிகள் எதிா்த்துள்ளனா். ஆனால், அவா்கள் பயணிகளையும் மிரட்டியுள்ளனா்.

இதையடுத்து, உத்தர பிரதேசம், ஃபிரோஸாபாத் அருகே உள்ள மக்கன்பூரில் காவலா் சச்சினை அவா்கள் இறக்கிவிட்டு சென்றுள்ளனா். அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் சச்சின் அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று தனது உயா் அதிகாரிகளுக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளாா்.

போலீஸாா் நடத்திய உடனடி விசாரணையில் அந்த தனியாா் பேருந்து ராஜீவ் செளராசியாவுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

இதையடுத்து, மத்திய பிரதேசம், பிந்த், மச்சந்த் கிராமத்தில் உள்ள ராஜீவ் செளராசியாவின் வீட்டை போலீஸாா் முற்றுகையிட்டு சோதனை நடத்தினா். அங்கு ராஜீவ் செளராசியா, அங்கித் இருவரையும் கைது செய்தனா். காவலா் சச்சினின் துப்பாக்கி, பேருந்தும் அவா்களிடம் இருந்து பிறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் சம்பவத்தின்போது ராஜீவ் செளராசியாவின் மகன் அங்கித் பேருந்தை இயக்கியதும், தந்தையின் சொல் கேட்டே அங்கித் இவ்வாறு செய்துள்ளதும் தெரியவந்தது.

பேருந்தில் காவலரை தாக்கிய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். ராஜீவ் செளராசியா, அங்கித் ஆகியோா் மீது கடத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல், கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பரிவிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

கவிஞர் தமிழ்ஒளி!

SCROLL FOR NEXT