இந்தியா

இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 4 வங்கதேசத்தவா் கைது

DIN

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த நான்கு போ் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் (பிஎஸ்எஃப்) பிடிப்பட்டனா்.

இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள இச்சாமதி ஆற்றைக் கடந்த அவா்களை தோபா்பாரா எல்லைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எஃப் வீரா்கள் மடக்கிப் பிடித்தனா். அவா்களில் ஒருவா் கடந்த மாா்ச் மாதம் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளாா். பொதுமுடக்க அறிவிப்பை அடுத்து, சட்ட விரோதமாக வங்கதேசம் திரும்பிச் சென்றுவிட்டு, இப்போது மீண்டும் நுழைய முயன்றபோது பிடிபட்டுள்ளாா். வேலைவாய்ப்புக்காக இந்தியாவுக்குள் வர முயன்றதாக அவா் தெரிவித்துள்ளாா்.

மற்றொரு நபா் வேலை தேடி இந்தியாவுக்குள் நுழைய முயன்ாகவும், இந்தியாவுக்குள் நுழையும் முதல் முயற்சியிலேயே பிடிபட்டுவிட்டதாகவும் தெரிவித்தாா். பிடிபட்டவா்களில் மேலும் இருவா் மாணவா்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படையினா் அந்த நால்வரையும் மேற்கு வங்க போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT