இந்தியா

ஹைதராபாத்தில் கரோனாவுக்கு கணவர் பலி; மனைவி தற்கொலை

24th Oct 2020 04:43 PM

ADVERTISEMENT


ஹைதராபாத்: கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கணவர் பலியான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

58 வயதான நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் கடந்த வியாழக்கிழமை பலியானார்.

கரோனா பாதித்த கணவர் பலியானதைத் தாங்கிக் கொள்ள முடியாத 55 வயதாகும் அவரது மனைவி, அவர்கள் வசித்து வந்த வீட்டின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உடற்கூராய்வுக்குப் பின் பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரது கணவரின் உடலை ஹைதராபாத் மாநகராட்சி ஊழியர்கள் கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நல்லடக்கம் செய்தனர்.
 

ADVERTISEMENT

Tags : suicide coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT