இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 78 லட்சத்தைக் கடந்தது: பலி 1,17,956 ஆக உயர்வு

DIN


புதுதில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 78,14,682 ஆக உயர்ந்துள்ளது. 650 புதிய உயிரிழப்புகளுடன் உயிரிழந்தவர்ளிந் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,17,956 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது 

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 53,370 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 78,14,682-ஆக அதிகரித்தது.

அதே காலகட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 650 போ் உயிரிழந்தனா். நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,17,956-ஆக அதிகரித்தது. இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.51 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 6,80,680-ஆக குறைந்துள்ளது. இது மொத்த கரோனா பாதிப்புடன் ஒப்பிடுகையில் 8.71 சதவீதமாகும். 

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 67,549 குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோா் எண்ணிக்கை 70,16,046-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 89.78 சதவீதமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரத்தில் 43,015 பேரும், கா்நாடகத்தில் 10,821 பேரும், கேரளத்தில் 1,232 பேரும்,  உத்தர பிரதேசத்தில் 6,755 பேரும், ஆந்திரத்தில் 6,508 பேரும், மேற்கு வங்கத்தில் 6,244 பேரும், தில்லியில் 6,128 பேரும், பஞ்சாபில் 4,060 பேரும், குஜராத்தில் 3,660 பேரும் உயிரிழந்தனா்.

நாட்டில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 12,69,479 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 23-ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 10,13,82,564 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT