இந்தியா

'பஞ்சாப் சிறுமிக்கு காங்கிரஸ் குரல் எழுப்பாதது ஏன்?'

24th Oct 2020 05:07 PM

ADVERTISEMENT

ஹாத்ரஸ் விவகாரத்தில் குரல்கொடுத்த காங்கிரஸ் கட்சியினர் பஞ்சாப் மாநிலத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து குரல் கொடுக்காதது ஏன்? என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் பாலியல் வன்கொடுமை செய்து தமது தாத்தாவின் உதவியுடன் வீட்டிலேயே எரித்துக்கொன்றார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே இது குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ''ஹாத்ரஸ் வன்கொடுமை விவகாரத்திற்கு குரல் கொடுத்த ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் பஞ்சாப் மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமிக்கு ஏன் குரல் எழுப்பவில்லை'' என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

''அரசியல் ரீதியாக உதவக்கூடிய மற்ற எல்லா இடங்களுக்கும் விரைந்து செல்லும் சகோதரர் மற்றும் சகோதரியின் மனசாட்சியை பஞ்சாப் வன்கொடுமை அசைக்கவில்லை. பாலியல் வன்கொடுமை விவகாரம் அரசியலாக்கக் கூடாது. சில மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு குரல் கொடுப்பார்கள். ஆனால் தங்களுக்கு வேண்டிய மாநிலங்களில் நடக்கும் வன்கொடுமைகளுக்கு அமைதி காப்பார்கள்.

பஞ்சாப் பாலியல் வன்கொடுமை குறித்து சுட்டுரைக் கண்டனம் கூட ராகுல்காந்தி தெரிவிக்கவில்லை. பஞ்சாப் சம்பவத்திற்கு கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதற்காக பயணங்களை மேற்கொள்ளவில்லை. ஒரு பெண்ணின் தலைமையில் இயங்கும் கட்சி பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுப்பதற்கு பாரபட்சம் பார்க்கிறது'' என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Tags : Nirmala Sitharaman
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT