இந்தியா

குஜராத்தில் வளர்ச்சித்திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர்

24th Oct 2020 01:49 PM

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் வேளாண்மைத்துறை, சுற்றுலாத்துறை, மருத்துவத்துறைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடக்கி வைத்தார்.

குஜராத் விவசாயிகளுக்கு பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டு நேரங்களிலும் மின்சாரம் வழங்கும் வகையில் கிசான் சூர்யோதயா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி விவசாயிகளுக்கு காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும். ரூ.3,500 கோடி மதிப்புடைய இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.

மேலும் குஜராத்தில் சுற்றுலாவாசிகளுக்குப் பயன்படும் வகையில் ரோப் கார் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். 2.3 கிலோமீட்டர் தூரத்திற்கான ரோப் கார் மூலம் மலைக்காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க இயலும்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து அமகதாபாத்திலுள்ள ஐ.நாவின் மேத்தா இருதவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்திலுள்ள குழந்தைகள் இருதய மருத்துவமனையையும் காணொலி வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார். 

Tags : Narendra Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT