இந்தியா

தில்லி: அடுத்த 2 நாள்களுக்கு மாசு அதிகரிக்கும் என எச்சரிக்கை

DIN

தில்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையை எட்டி வருவதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த இரண்டு நாள்களில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன. காடுகளை ஊக்குவிப்பது, சாலைகளில் தண்ணீர் பாய்ச்சுவது, சிக்னல்களில் வாகனங்களை அணைத்து வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் நேற்றை விட காற்று மாசு இன்று மோசமடைந்துள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. காற்றின் தரக்குறியீடு நேற்று 302-ஆக இருந்த நிலையில் இன்று 366-ஆக பதிவாகியுள்ளது.

மேலும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா ஆகிய பகுதிகளில் விவசாயக் கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவதால், அடுத்த இரண்டு நாள்களில் காற்றின் தரம் மேலும் மோசமடையும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள காற்று மாசுபாடு கண்காணிப்பு மையங்களில் 10 மையங்கள் மோசமான காற்று மாசைப் பதிவு செய்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT