இந்தியா

'இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை நாட்டின் முக்கியமானத் தூண்'

24th Oct 2020 01:32 PM

ADVERTISEMENT

இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை நாட்டின் முக்கியமானத் தூண்கள் என்று உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான மலையேற்றப் பயிற்சியின் 59-வது நாளில் அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொண்டு வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், கடந்த சில மாதங்களாக இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் ஒரு சில முன்னேற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்காக அதிநவீன ஆயுதங்கள் வாங்கப்பட்டன. 

மேலும், நக்சல் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதற்காக 28 புதிய வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில நாடுகளில் மட்டுமே வலுவான எல்லைப் பாதுகாப்புப் படைகள் உள்ளதாக சீனாவைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், நவீன உபகரணங்கள் மற்றும் பயிற்சியின் மூலம் இதனை தற்போது இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பொய்யாக்கியுள்ளதாகக் கூறினார்.

ADVERTISEMENT

இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நாட்டின் மிகமுக்கியத் தூண். பிற நாட்டு எதிரிகள் தாக்க முற்பட்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் என்றும் நாம் தயாராக இருக்க வேண்டும். நாடும் நாட்டு மக்களும் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களால் பெருமைகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags : G Kishan Reddy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT