இந்தியா

3 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒப்புதல்

DIN

அஸ்ஸாமில் குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணிபுரியும் 3 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

கூடுதல் நீதிபதிகளான மணீஷ் சௌதரி, சஞ்சய் குமாா் மதி, நானி தைகியா ஆகிய மூவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவா்களில், சஞ்சய் குமாா் மதி, நானி தைகியா ஆகிய இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம், கூடுதல் நீதிபதிகளாக பதவி உயா்வு பெற்றனா். மணீஷ் சௌதரி கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி கூடுதல் நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் குழுவில் நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆா்.எஃப்.நாரிமன், யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT