இந்தியா

உ.பி.யில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

DIN

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,277 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,277 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,238-ஆக அதிகரித்துள்ளது.

இதில் கரோனா தொற்றால் 27,681 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4,33,703-ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைவோர் விகிதம் 92.62 சதவிகிதமாக உள்ளது.

புதிதாக 25 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,854-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT