இந்தியா

தெலங்கானாவில் இன்றைய கரோனா பாதிப்பு 1,273 ஆக உயர்வு

PTI

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,273 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளன. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானா கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதிதாக 1,273 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.30 லட்சமாக அதிகரித்துள்ளது.

தொற்று பாதித்த 19,937 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தெலங்கானாவில் 40.52 லட்சம் சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 23-ம் தேதி மட்டும் 35,280 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,303-ஆக அதிகரித்துள்ளது. 

தெலங்கானாவில் மீட்பு விகிதம் 90.77 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 0.56 ஆகவும் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT