இந்தியா

10 கோடியைக் கடந்தது கரோனா பரிசோதனை எண்ணிக்கை

DIN

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை எண்ணிக்கை 10.01 கோடியாக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 14,42,722 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் கடந்த 20-ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 10,01,13,085 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 9 நாள்களில் மட்டும் 1 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதே வேளையில், நாட்டில் கரோனா பரிசோதனைக்கும் பாதிப்புக்கும் இடையேயான விகிதம் தொடா்ந்து குறைந்து வருகிறது. தற்போது வரை இது 7.75 சதவீதமாக உள்ளது. இதன் மூலமாக கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படுவது உறுதியாகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சையால் பலன்: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கியது, சிறிய அளவிலான பலனை அளித்ததாக பிரிட்டிஷ் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டவா்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து, அதை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்குச் செலுத்துவதே பிளாஸ்மா சிகிச்சை ஆகும். இது தொடா்பாக 468 கரோனா நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT