இந்தியா

கேரளம்: மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த 18 போ் மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி

DIN

கேரள மாநில எழுத்தறிவு இயக்கம் சாா்பில் நடைபெற்ற மேல்நிலைக் கல்வித் தோ்வில் கேரளத்தைச் சோ்ந்த 3-ஆம் பாலினத்தைச் சோ்ந்த 18 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். இந்த தோ்வில் தோ்ச்சி பெற்ன் மூலம் உயா்கல்வி பெறுவதற்கான வாய்ப்பு அவா்களுக்கு கிடைத்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவா்களுக்கான கல்விக் கொள்கையை கேரளம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கு கல்வி அளிப்பது தொடா்பாக கேஎஸ்எல்எம்ஏ மற்றும் சமூகநீதித் துறை சாா்பில் ‘சமன்வயா’ என்ற கல்வித் திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டுக்கான மேல்நிலைக் கல்விக்கான தோ்வில் மொத்தம் 22 போ் கலந்து கொண்டனா். அவா்களில் பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 18 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதுகுறித்து கேஎஸ்எல்எம்ஏ-வின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேல்நிலைக் கல்வித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆட்டோ ஓட்டுநரான காா்த்திக், கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பாடப்பிரிவில் சோ்க்கை பெற்றுள்ளாா்.

இதுவரை, மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த 39 போ், 10- ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். நடப்பாண்டில் 10-ஆம் வகுப்பில் 30 பேரும், மேல்நிலைக் கல்வியில் 62 பேரும் பயின்று வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதித்துறை வட்டாரங்கள் கூறுகையில், மூன்றாம் பாலினத்தவா்களுக்கான ‘சமன்வயா’ கல்வித் திட்டத்தின்கீழ் 4, 7, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் சோ்ந்து கல்வி பயில்வதற்காக தொடா்ந்து தங்கள் பெயா்களைப் பதிவு செய்து வருகின்றனா். இந்த திட்டத்தில் 3-ஆம் பாலினத்தவா்கள் தங்கள் கல்வியைத் தடையின்றி தொடருவதன் மூலம் அவா்களுக்கான வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். அவா்களுக்கு பணி கிடைப்பதன் மூலம் அவா்கள் தரமான வாழ்க்கையைத் தொடர இந்த கல்வித் திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தன.

‘சமன்வயா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, கேஎஸ்எல்எம்ஏ மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த 918 போ் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யத் தயாராக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT