இந்தியா

'பிரதமர் மோடி எங்கு சென்றாலும் பொய்யுரைக்கிறார்': ராகுல்காந்தி

DIN

வேலைவாய்ப்பு விவகாரத்தில் மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பொய் கூறுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் குற்றம் சாட்டினார்.

பிகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொண்டுவரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் ராஷ்டிர ஜனதா தளக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள ஹிசுவா பகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணி சார்பில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றினர்.

இதில் பேசிய ராகுல்காந்தி,  ''பிகார் மக்களிடையே பிரதமர் மோடி பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். பிகார் மக்களிடம் பொய்க் கூற வேண்டாம். கடந்த தேர்தலின்போது 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறிய பிரதமர் மோடி பிகார் மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கினாரா?'' என்று கேள்வி எழுப்பினார்.
 
''பொதுவாக ராணுவம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக நான் தலை வணங்குகிறேன் என்று பிரதமர் கூறுகிறார்.
ஆனால் அவர் அவர் அம்பானி மற்றும் அதானிக்க்கு மட்டுமே விசுவாசமாக செயல்படுகிறார்.'' என்று விமர்சித்தார்.

''சீன ராணுவம் இந்திய வீரர்கள் 20 பேரைக் கொன்று எல்லையைக் கைப்பற்றியது. ஆனால் இந்தியாவுக்குள் அவர்கள் வரவில்லை என்று பொய்யுரைக்கிறார்.'' என்றார்.

மேலும், ''விவசாயிகளைத் தாக்கும் வகையில் 3 புதிய வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி அரசு அறிமுகம் செய்துள்ளது. விவசாயக் குழு மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை என்று பிகார் விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தி வந்த நிலையில், தற்போது அதனை நாடு முழுவதும் மோடி அரசு செய்து வருகிறது.

வேளாண் சட்டங்கள் மூலம் லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் பொய்யினை மட்டுமே உரைக்கிறார்'' என்று பிரசாரத்தில் ராகுல்காந்தி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT