இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ரூ.2 கோடி ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்

DIN


ஜம்மு: ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான 3.2 கிலோ ஹெராயின் போதைப்பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டம் பசூனி பகுதியில் போதைப்பொருள் பரிமாற்றம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து அப்பகுதி முழுவதும் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா். இந்த தேடுதல் வேட்டையின்போது 3 கட்டுகளில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 3.2 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக மேந்தா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

அப்பகுதி இளைஞா்களை போதைப்பொருளின் பிடியில் இருந்து மீட்கும் காவல்துறையின் செயல்பாட்டை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT